மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அய்யாசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய மகன் அய்யப்பன் (வயது 27). இவர் நேற்று ஜெயங்கொண்டம் -செந்துறை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (29) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அய்யப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அய்யப்பனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story