வாகனம் மோதி வாலிபர் படுகாயம்
வாகனம் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த கோரைக்குழி காலனி தெருவை சேர்ந்தவர் மருதமுத்து மகன் வடிவரசன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் மாலை தனது ஊரில் இருந்து மொபட்டில் வி.கைகாட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தேளூர் துணை மின் நிலையம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வடிவரசனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story