கார் மோதி வாலிபர் பலி


கார் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி வாலிபர் பலி

விருதுநகர்

ராஜபாளையம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம்(வயது 28). இவர் ராஜபாளையம் நகராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு பணிகளை செய்து வந்தார். அதற்காக ராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு பகுதியில் தங்கி இருந்தார். இந்நிலையில் இவரும், கடலூர் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் சத்திரப்பட்டி சாலையில் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில், ஸ்ரீராம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரவணன் லேசான காயத்துடன் தப்பினார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டி வந்த தீபக்ராஜ்(34) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story