கார் மோதி வாலிபர் பலி
செஞ்சி அருகே கார் மோதி வாலிபர் பலி
விழுப்புரம்
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள கொங்கரப்பட்டு என்ற ஊரை சேர்ந்த தவமணி என்பவரது மகன் சந்துரு(வயது 20). இவர் நேற்று முன்தினம் காலை தனது நண்பர்கள் ஸ்ரீநாத், நிதீஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சந்துரு ஓட்டினார்.
கொங்கரப்பட்டு வல்லம் இடையே வந்தபோது எதிரே வந்த கார் சந்துரு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் இருவரும் காயம் இன்றி உயிர் தப்பினா். இந்த விபத்து குறித்து சந்துருவின் அண்ணன் சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story