மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி


மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி
x

தூசி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

தூசி

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா வேடன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி (வயது 40), தனியார் பஸ் டிரைவர்.

இவர் நேற்று இரவு செய்யாறு அருகே உள்ள நெடுமுறை கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

தூசியை அடுத்த மகாஜனபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (23), செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இவர் மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரம்- வந்தவாசி சாலை தூசியை அடுத்த மாங்கால் கிராமம் பெரியாண்டவர் கோவில் எதிரில் வந்தபோது தரணி வந்த மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு மோதியது.

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கு உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அஜித்குமார் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். தரணி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story