சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சேலம்
சேலம் கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு காலனியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 25). இவர், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி தனது வீட்டிறகு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், போக்சோ சட்டத்தின் கீழ் நவீன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நவீன்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.
Next Story