கஞ்சா விற்ற வாலிபர்கள் சிக்கினர்
கஞ்சா விற்ற வாலிபர்கள் சிக்கினார்கள்
மதுரை
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் (பயிற்சி) சப்-இன்ஸ்பெக்டர் கேசவன், ஏட்டுக்கள் சுந்தரபாண்டி, பாண்டி ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது நாட்டாமைக்காரர் தெருவில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அலங்காநல்லூர் அரவிந்த்சாமி (29), கிருஷ்ணன் (38) என்று தெரிவித்தனர். அவர்கள் மீது சந்தேகப்பட்ட போலீசார் அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பையை திறந்து பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 150 கிராம் கஞ்சா 44 பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள், ரொக்க பணம் ரூ.800 மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story