தேய்பிறை அஷ்டமி பூஜை: காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம்


தேய்பிறை அஷ்டமி பூஜை: காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம்
x

தேய்பிறை அஷ்டமி பூஜை: காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம்

மதுரை

மேலூர்

மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது. அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், தொற்று நோய்களில் இருந்து மக்கள் நலமுடன் வாழவேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் காலபைரவர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. காலபைரவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். கோளறு பதிகம், பைரவர் அஷ்டகம் பைரவர் 108 போற்றி தேவாரம், திருவாசகம், சிவபுராணம் ஆகியவற்றை பக்தர்கள் பாராயணம் செய்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story