சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு


சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
x

தேய்பிறை அஷ்டமியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர்

நொய்யல் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் வேலாயுதம்பாளையம் தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து செம்பருத்தி பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.


Next Story