ஓசூரில் இன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா


ஓசூரில் இன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார விழாநடக்கிறது.

சூரசம்ஹார விழா

ஓசூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கடந்த 25-ந் தேதி கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை)நடக்கிறது.

ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது.

பிருந்தாவன் நகர் முருகன் கோவில்

முன்னதாக சாமி, அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து சாந்தி அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது. நாளை (திங்கட்கிழமை) மாலை முருக பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதேபோல் ஓசூர் என்.ஜி.ஜி.ஓ. காலனி முருகன் கோவில் மற்றும் பிருந்தாவன் நகர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. பிருந்தாவன் நகர் முருகன் கோவிலில் விழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து முருகன், சிவன் மடி மீது அமர்ந்த கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story