தர்மபுரி ராகவேந்திர சாமி கோவிலில் 1 லட்சம் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்

தர்மபுரி ராகவேந்திர சாமி கோவிலில்  1 லட்சம் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு  திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி ராகவேந்திர சாமி கோவிலில் 1 லட்சம் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்

தர்மபுரி

தர்மபுரி விருப்பாச்சிபுரத்தில் உள்ள உடுப்பி புத்திகே மட கிளையான ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவிலில் 1 லட்ச தீப விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அலங்கார சேவையும், கார்த்திகை தாமோதர ஹோமம் மற்றும் துளசி பூஜையும் நடைபெற்றது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் 1 லட்சம் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பாண்டுரங்க விட்டலா பஜனை குழுவினரின் பல்வேறு தாசர்களின் பாடல்கள் பாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் வெங்கட்ராமன், ராமமூர்த்தி, கிருஷ்ணன், சீனிவாசன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story