அரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாவை குழு தொடக்கம்
தர்மபுரி
அரூர்:
அரூர் சந்தைமேட்டில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பாவை குழு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் கொள்ளுபேத்தியும், ஆன்மிக சொற்பொழிவாளருமான உமாபாரதி கலந்து கொண்டு, திருப்பாவை குழுவை தொடங்கி வைத்தார். மேலும் குழுவை சேர்ந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து, திருப்பாவை புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை, வேணுகோபால் அய்யர், நரசிம்மன், ஸ்ரீதர் மற்றும் பாரதியார் மன்ற பொறுப்பாளர்கள், கம்பன் கழகத்தினர், தமிழ் ஆர்வலர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது அவர் தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ் இலக்கியத்தில் பாரதியாரின் தாக்கம் குறித்த ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
Next Story