கொளம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா-பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
அரூர்:
அரூரை அடுத்த கொளகம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தீ மிதி விழா மற்றும் தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 11 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து சாமியை வழிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தீ மிதி விழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் பூக்கூடை, பூங்கரகம் மற்றும் தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
மேலும் அலகு குத்தியும் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் அருகே 23 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்ட குண்டல் இறங்கி, பக்தர்கள் தீ மிதித்தனர். சிலர் தங்களது குழந்தைகளை கையில் தூக்கியவாறு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.