மாரண்டஅள்ளியில் பச்சியம்மன் கோவில் திருவிழா


மாரண்டஅள்ளியில் பச்சியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளியில் பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள பச்சியம்மன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 5 நாட்கள் நடந்தது. அதன்படி கடந்த 4-ந் தேதி காலை பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் வழிபாடு செய்தனர். மாலை சனத்குமார் நதியில் இருந்து சக்தி அழைக்கப்பட்டு, கொடியேற்றுதல் நடந்தது. 5-ந் தேதி அம்மனுக்கு இருமுடி சாற்றுதலும், பூங்கரகம் எடுத்தலும் நடந்தது. 6-ந் தேதி அக்னி கரகம் எடுத்தல், தீ மிதித்தல் நடந்தன. தொடர்ந்து சாமனூர், அத்திமுட்லு, கானூர்கொட்டாய் கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வந்தனர். 7-ந் தேதி தேர் உற்சவம் நடந்தது. மாலை கும்ப பூஜை மற்றும் வாண வேடிக்கை நடத்தப்பட்டது. நேற்று பச்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாண்டவர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story