தேய்பிறை பஞ்சமியையொட்டி வராஹி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தேய்பிறை பஞ்சமியையொட்டி வராஹி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தேய்பிறை பஞ்சமியையொட்டி வராஹி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேய்பிறை பஞ்சமி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வராஹி அம்மன் கோவில்களிலும் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளி தானப்பகவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் , பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் உபகார பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அஷ்ட வராஹி அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

மகா காளி வராஹி அம்மன்

இதேபோன்று தர்மபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அன்பளித்தார்.

தர்மபுரி அருகே மொடக்கேரி கிராமத்தில் அமைந்துள்ள 16 அடி உயரமுள்ள மகா காளி வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற எலுமிச்சை, தேங்காய் மற்றும் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story