அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்பத்தேர் பவனி
அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று தெப்பத்தேர் பவனி
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்ட வரலாறும் உடைய சிறப்பு பெற்றது அவினாசி லிங்கேஸ்வரர் கோவில். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. கடந்த 29-ந்தேதி இரவுபஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்கள் காட்சி அளித்தல் ஆகியவை நடந்தன. கடந்த 2-ந்தேதி மற்றும் 3-ந்தேதி பெரிய தேர் இழுக்கப்பட்டது. 4-ந்தேதி சிறிய தேர் (அம்மன் தேர்) இழுக்கப்பட்டது. நேற்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இன்று(சனிக்கிழமை) இரவு அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.