எஸ்.வாழவந்தியில்செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா
மோகனூர்:
மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் உள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. நேற்று காலை 25 அடி உயரம் உள்ள தூக்கு தேர் அலங்கரிக்கபட்டு சாமி தேரில் ரதம் ஏறி பக்தர்கள் தூக்குதேரை தூக்கி சென்றனர். எஸ்.வாழவந்தி பகுதியில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து எல்லையோடும் நிகழ்ச்சி, ஊமை புலி குத்தும் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து தேர் சின்னகரசபாளையம், பெரியகரசபாளையம், கே.ராசம்பாளையம், காளிபாளையம், பெரமாண்டம்பாளையம், முத்தூர், ஆண்டிபாளையம், வடக்கு தீர்த்தாம்பாளையம், மோள கவுண்டனூர், குட்லாம்பாறை, கே.அய்யம்பாளையம், நொச்சிப்பட்டி, கே.புதுப்பாளையம், அக்கரையாம்பாளையம், புளியம்பட்டி, வள்ளியப்பம்பட்டி, வள்ளியப்பம்பட்டி புதூர் என 18 கிராமங்களுக்கும் தேரை தூக்கி சென்று தினசரி இரவு மாவிளக்கு பூஜை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறைனர், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.