ரூ.25 லட்சத்து 93 ஆயிரம் உண்டியல் காணிக்கை


ரூ.25 லட்சத்து 93 ஆயிரம் உண்டியல் காணிக்கை
x

பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் ரூ.25 லட்சத்து 93 ஆயிரம் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்டு இருந்தது.

தஞ்சாவூர்

கரம்பயம்;

பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் ரூ.25 லட்சத்து 93 ஆயிரம் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்டு இருந்தது.

பொது ஆவுடையார் கோவில்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரக்கலக்கோட்டையில் மத்திய புரீஸ்வரர் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை 3-வது சோமவார திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில் இந்து சமய அறநிலைத்துறை தஞ்சை இணை ஆணையர் எம்.சூரிய நாராயணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் நாகையா தலைமையில் இந்த கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

ரூ.25 லட்சத்து 93 ஆயிரம்

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது பொது ஆவுடையார் கோவில் செயல் அலுவலர் வடிவேல்துரை, பரம்பரை அறங்காவலர்கள் ராதா, முரளிதரன், சரக ஆய்வாளர்கள் ஜெயசித்ரா, அமுதா, மற்றும் சிறப்பு அலுவலர்கள் மேற்பார்வையில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது.பணத்தை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் பணியாளர்கள் மற்றும் தாமரங்கோட்டை ஸ்ரீ குமரன் கல்வியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் ரூ.25 லட்சத்து 93 ஆயிரத்து 892-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


Next Story