திருவாரூர் தியாகராஜர் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம்


திருவாரூர் தியாகராஜர் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம்
x

சூரிய கிரகணத்தின் போது திருவாரூர் தியாகராஜர் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நேற்று நடந்தது.

திருவாரூர்

திருவாரூர்;

சூரிய கிரகணத்தின் போது திருவாரூர் தியாகராஜர் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நேற்று நடந்தது.

சூரிய கிரகணம்

சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றி பல புராண கதைகள் இருந்தாலும் அறிவியல் பூர்வமாக சில உண்மைகளும் உள்ளன. நேற்று மாலை 4.29 மணி முதல் 5.42 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பார்க்க முடியும்.கிரகணம் நிகழும் நாளில் அனைத்த கோவில்களின் நடை மூடப்படுவது வழக்கம். ஆனால் சைவ சமயங்களின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ கோவிலுக்கு தனிசிறப்பு உண்டு. இந்த கோவிலில் அனைத்து நவக்கிரங்கள் ஒரே திசையில் தியாகராஜ சாமியை நோக்கி அமைந்துள்ளது. தியாகராஜ சாமி மகாராஜாவாக இருந்து நவக்கிரக தோஷங்களை நீக்குவதால் சர்வதோஷ பரிகார தலமாகவும் இந்த கோவில் விளங்கிறது.

கிரகண அபிஷேகம்

இதனால் கிரகண நேரங்களில் சாமிக்கு கிரகண அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.நேற்று சூரிய கிரகணத்தின் போது திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடை திறக்கபபடடு தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபராதனை நடைபெற்றது.



Next Story