ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4 கோடி கோவில் நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4 கோடி கோவில் நிலம் மீட்பு
திருப்பூர்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் உத்தமபாளையத்தில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் உத்தமபாளையத்தில் 20 ஏக்கர் 63 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் இருந்தது. இதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அறிவுறுத்தலின்படி, இணை ஆணையாளர் குமரதுரை, உதவி ஆணையார் செல்வராஜ், தனிதாசில்தார் (ஆலய நிலங்கள்) கனகராஜ், கோவில் தக்கார் திலகவதி மற்றும் பணியாளர்கள் நேற்று அங்கு ஆய்வு செய்தனர்.
5 ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து மொத்தம் 20 ஏக்கர் 63 சென்ட் நிலம் மீட்கப்பட்டு கோவில் வசம் கையகப்படுத்தப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியாகும்.
Related Tags :
Next Story