Normal
நல்லமாகாளியம்மன் கோவில் திருவிழா
முத்துப்பேட்டை மருதங்காவெளி நல்லமாகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திருவாரூர்
முத்துப்பேட்டை:-
முத்துப்பேட்டை மருதங்காவெளி நல்லமாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவிலூர் கோவிலில் இருந்து சாமி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சித்தேரிகுளம் கரையில் இருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலம் மன்னார்குடி சாலை, பழைய பஸ் நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக புதுக்காளியம்மன் கோவில் சென்று மீண்டும் மன்னார்குடி சாலை வழியாக வந்து கோவிலை அடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சுமந்து சென்றனர். ஊர்வலத்தையொட்டி முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story