அழகு மாரியம்மன் கோவில் திருவிழா


அழகு மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 5 Jun 2022 4:47 PM IST (Updated: 5 Jun 2022 4:48 PM IST)
t-max-icont-min-icon

அழகு மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் வடகட்டளையில் உள்ள அழகு மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதில், வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் எள்ளுக்கொல்லை பிள்ளையார் கோவிலில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால் குடம் எடுத்து ஊர்வலமாக அழகு மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். இதனையடுத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சக்தி கரகம் வீதி உலா நடந்தது. விழாவையொட்டி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story