கதிர்காம பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா
கதிர்காம பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள கதிர்காம பால தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தன. பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகமும் நடந்தன. விழாவில் நேற்று மாலை முருகப்பெருமான் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story