தான்தோன்றீஸ்வரர் கோவில் குடமுழுக்கு 4-ந் தேதி நடக்கிறது


தான்தோன்றீஸ்வரர் கோவில் குடமுழுக்கு   4-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

51.புதுக்குடியில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு வருகிற 4-ந் தேதி நடக்கிறது.

திருவாரூர்

51.புதுக்குடியில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு வருகிற 4-ந் தேதி நடக்கிறது.

தான்தோன்றீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 51.புதுக்குடி கிராமத்தில் சவுந்தர நாயகி சமேத தான்தோன்றீஸ்வரர், அஷ்டபுஜ காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடந்தன. இதையடுத்து வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை நடந்தது. இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி இரவு வரை 7 கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. 4-ந் தேதி காலை 8 மணிக்கு 8-ம் கால யாக சாலை பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது.

ஏற்பாடுகள்

விழாவில் ஆதீன கர்த்தர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட பலர் கலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கங்காதரன், ஆய்வாளர் ஆரோக்கிய மதன், திருப்பணி குழு நிர்வாகி சிவா சிவாச்சாரியார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


Next Story