வேணுகோபாலசாமி கோவில் தீர்த்தவாரி


வேணுகோபாலசாமி கோவில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 7 Dec 2022 12:30 AM IST (Updated: 7 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

வேணுகோபாலசாமி கோவில் தீர்த்தவாரி நடந்தது.

திருவாரூர்

வடுவூர் அருகே உள்ள ராயபுரம் வேணுகோபாலசாமி கோவிலில் பவித்ர உற்சவ தீர்த்தவாரி நடைபெற்றது. இக்கோவிலில் நடைபெற்ற பவித்ர உற்சவத்தின் நிறைவாக யாகசாலையில் ருக்மணி, சத்தியபாமா தாயார்கள் சமேதராக வேணுகோபால சாமி வண்ணமயமான பவித்ர மாலைகள் அணிந்து அருள்பாலித்தார். அப்போது தீர்த்த பேரரை எழுந்தருளச் செய்து பல்வேறு வகையான மங்கல பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story