தேன்கனிக்கோட்டையில்மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 1-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கொடியேற்றுதல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், தேவராஜ் ஏரியில் கங்கா பூஜை, சிலம்பாட்டம், தீமிதிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை சேலத்து மாரியம்மன், ஓம்சக்தி அம்மன், உத்தண்டி மாரியம்மன், பட்டாளம்மன், எல்லம்மன், கங்கையம்மன் கோவில்களில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பக்தர்கள் வாய், முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடியும், வாகனங்களை இழுத்தும் ஊர்வலமாக தேர்ப்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.