போச்சம்பள்ளி அருகேசென்னம்மாள் கோவில் திருவிழா


போச்சம்பள்ளி அருகேசென்னம்மாள் கோவில் திருவிழா
x
கிருஷ்ணகிரி

மத்தூர்

போச்சம்பள்ளி அருகேயுள்ள வண்டிகாரன் கொட்டாய் கிராமத்தில் சென்னம்மாள் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் பூசாரி கொதிக்கும் எண்ணெயில் இருந்து கையை வைத்து அதிரசம் எடுத்து சாமிக்கு படையலிட்டார். தொடர்ந்து பக்தர்களும் வெறும் கையால் அதிரசங்களை எடுத்து அங்கிருந்த கூடையில் வைத்தனர், பின்னர் கோவில் பூசாரி அந்த அதிரசங்களை தரையில் மண்டியிட்டவாறு கோவிலை சுற்றியுள்ள சாமி சிலைகள் முன்பாக படையலாக வைத்து பூஜை செய்தார். இந்த திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கிடா வெட்டி கறி விருந்து வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story