தேவூர் அருகேகத்தேரி முனியப்பன் கோவில் திருவிழா


சேலம்

தேவூர்

தேவூர் அருகே கத்தேரி பகுதியில் முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி பூசாரி ஆனி பதித்த காலணியை காலில் அணிந்து பக்தர்கள் மீது நடந்து சென்றார். இதனையடுத்து பக்தர்களுக்கு வேப்பிலையில் பாடம் போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வேப்பிலை பாடம் போட்டு கொண்டனர். தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், கன்னிமார் பூஜை, மகா முனியப்பன் பெரிய பூஜை நடைபெற்றது. இதில் தேவூர் சுண்ணாம்புக்கரட்டூர், குமாரபாளையம், பவானி, அத்தானி அம்மன்பாளையம், கத்தேரி, சாமியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story