மயிலாடுதுறை அருகே சிந்தாமணி விநாயகர் கோவில் குடமுழுக்கு
மயிலாடுதுறை அருகே சிந்தாமணி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் கோடிஹத்தி பாபவிமோசனபுரம் என்கிற கோழிகுத்தி கிராமத்தில் சிந்தாமணி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை மற்றும் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, முதற்கால யாகசாலை பூஜை ஆகியவை நடந்தன. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவில் விமான கலசத்தை அடைந்தது. பின்னர், விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவினை மூவலூர் சாமிநாத குருக்கள் நடத்தி வைத்தார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கோழிகுத்தி, சோழன்பேட்டை கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story