பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்


பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்
x

பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு அருகே பார்த்தன் பள்ளியில் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்யப்பட்டது. இதனையடுத்து பெருமாள் யானை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story