கன்னியம்மன் கோவில் குடமுழுக்கு
திருக்கடையூரில் கன்னியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
மயிலாடுதுறை
திருக்கடையூர்
திருக்கடையூர் மெயின் ரோட்டில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 26-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று 2- கால யாக பூஜைகள் முடிவடைந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க விமான கலசங்களை அடைந்தன. முன்னதாக தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தினர். குடமுழுக்கையொட்டி பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story