போடி சண்முகசுந்தரபுரம் பாலவிநாயகர், தங்க முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


தினத்தந்தி 6 July 2022 4:51 PM GMT (Updated: 7 July 2022 11:39 AM GMT)

போடி சண்முகசுந்தரபுரம் பாலவிநாயகர், தங்க முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி

போடி சண்முகசுந்தரபுரம் பாலவிநாயகர், தங்க முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம்

போடி நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு பகுதியான சண்முகசுந்தரபுரத்தில் சேனைத்தலைவர் மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பாலவிநாயகர், தங்க முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில், மதுரை மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி, யாகசாலை பூஜையை நடத்தினர். பின்னர் கும்பாபிஷேக விழாவின் நிர்வாகிகளுக்கு மாலைகள், சுவாமி படங்கள் அடங்கிய துண்டுகள் அணிவிக்கப்பட்டு, 20-வது வார்டு பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர்த்தங்கள் அடங்கிய குடங்கள் யாகசாலை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் நீர்த்தக்குடங்களை தலையில் சுமந்து, கோவிலில் கோபுரத்தில் ஏறி, அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள், சிவனடியார்கள் "விநாயகா.. தங்கமுத்து தாயே, மாரியம்மா தாயே.." என்று கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். பின்னர் பாலவிநாயகர், தங்க முத்துமாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கலந்துகொண்டவர்கள்

இந்த விழாவில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், ஓய்வுபெற்ற தீயணைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி, அமிர்தவல்லி, கோவில் நிர்வாகிகள் கே.கே.பிச்சை, தர்மர், அய்யனார், குருசாமி, ஜோதிடர் அய்யனார், துரைமணி, ரத்தினவேல், கிருஷ்ணன், ஏலக்காய் வர்த்தகர் எம்.சம்பத், பாலாஜி, போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, கவுன்சிலர்கள் சங்கர், மகேஸ்வரன், முருகம்மாள் சுவீட்ஸ் உரிமையாளர்கள் சண்முகம், சத்தியமூர்த்தி, ஜே.ஜே. ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஜெகஜோதி, அன்பரசன், மீனாட்சி சமையல் பாத்திரக்கடை உரிமையாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா தலைவர் பிச்சை பிள்ளை, செயலாளர் அங்குவேல் பிள்ளை, பொருளாளர் குமார் பிள்ளை, துணைச்செயலாளர் கனிநாதன் பிள்ளை, துணைத்தலைவர் முருகேசன் பிள்ளை, நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, அய்யனார், ஆறுமுகம், பிருதிவிராஜ், சன்னாசி, ராம்குமார் மற்றும் சண்முகசுந்தரபுரம் சேனைத்தலைவர் மகாஜன சங்க உறுப்பினர்கள், சேனைத்தலைவர் வாலிபர் சங்கம், சேனைத்தலைவர் மாதர் சங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story