சாணார்பட்டி அருகே எருது விடும் விழா


சாணார்பட்டி அருகே எருது விடும் விழா
x

சாணார்பட்டி அருகே எருது விடும் விழா நடைபெற்றது.

திண்டுக்கல்

சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டியை அடுத்துள்ள நிலப்பட்டியில் கோடாங்கிதாத்தையன், முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பழம் படைத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவையொட்டி இன்று பாரம்பரிய எருது விடும் விழா நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது எல்லைக்கோட்டில் இருந்து ஓடிய காளைகளை பக்தர்கள் தொட்டு வணங்கினர். பின்னர் காளைகள் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதனை கம்பிளியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.


Related Tags :
Next Story