அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா


அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா
x

வேளாங்கண்ணி, நாகூரில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்தது. வடக்குப்பொய்கைநல்லூர் நந்தவன காளியம்மனுக்கு 10 ஆயிரத்து 8 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி, நாகூரில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்தது. வடக்குப்பொய்கைநல்லூர் நந்தவன காளியம்மனுக்கு 10 ஆயிரத்து 8 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

நந்தவன காளியம்மன்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வடக்கு பொய்கைநல்லூர் எல்லை ரோடு பகுதியில் நந்தவன காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆடிமாத திருவிழாவையொட்டி அம்மனுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்பட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 10 ஆயிரத்து 8 வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பஞ்சமுக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நாகூர்

நாகூர் அருகே சம்பாத்தோட்டத்தில் படைவீட்டு அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம், காவடி எடுத்து மெயின்ரோடு வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சம்பாதோட்டம் கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story