ஐந்து முனியப்பன் சுவாமி கோவில் திருவிழா


ஐந்து முனியப்பன் சுவாமி கோவில் திருவிழா
x

வெண்ணந்தூரில் ஐந்து முனியப்பன் சுவாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

நாமக்கல்

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் ஊர் எல்லையில் எழுந்தருளியுள்ள ஐந்து முனியப்பன் சுவாமி கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வியாழக்கிழமை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் நேற்று காலை விழா கொடியேற்றத்துடன் விமர்சியாக தொடங்கப்பட்டது. அதிகாலை முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பொங்கல் வைத்து கிடா, கோழி, சேவல் போன்றவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலுக்கு வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அளவாய் பட்டி, நடுப்பட்டி, அத்தனூர், மின்னக்கல், வடுகம்பாளையம், நாச்சிப்பட்டி, செம்மாண்டப்பட்டி என பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story