பிடாரியம்மன் கோவில் தேர் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி


பிடாரியம்மன் கோவில் தேர் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 May 2023 12:30 AM IST (Updated: 4 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பிடாரியம்மன் கோவில் தேர் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகையில் பிடாரி அம்மன், வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் முன்னோட்டம், பின்னோட்டம் நேற்று நடந்தது. அப்போது பக்தர்கள் 3 தேர்களை சுமந்து கொண்டு முன்னும், பின்னுமாக ஓடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பூத சிலைகள் வீதிஉலா, வேண்டுதல் சிலைகள் வீதிஉலா நடந்தது. திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அகரக்கொந்தகை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story