மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.

சேலம்

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.

சித்திரை திருவிழா

சேலம் அஸ்தம்பட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன், பிடாரியம்மன், விநாயகர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

தொடர்ந்து கடந்த 2-ந் தேதி கம்பம் நடுதலும், 5-ந் தேதி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் பால்குட எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து இரவு பெண்கள் மாவிளக்கு ஏந்தி வழிபட்டனர்.

அலகு குத்தி ஊர்வலம்

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மேலும், சிலர் அம்மன் வேடம் அணிந்தும், விமான அலகு குத்தியும் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக வந்தனர். இதனால் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் பக்தர்கள் அக்னி கரகம் மற்றும் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது.

இன்று (வியாழக்கிழமை) மாறுவேட நிகழ்ச்சியும், மதியம் அன்னதானமும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜையும், இரவு 12 மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அப்போது, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. 13-ந் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மதியம் 2 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. 19-ந் தேதி மாலை 6 மணிக்கு மகா மாரியம்மன், பிடாரியம்மன், விநாயகருக்கு மறுபூஜை நடைபெறுகிறது.


Next Story