தில்லை காளியம்மன் கோவில் திருவிழா
தில்லை காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
மதுரை
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி, வகுத்துமலை அடிவாரத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் தில்லை காளியம்மன்கோவில் திருவிழா மற்றும் அமுதுபடையல், வளைகாப்பு அணிவிக்கும் விழா நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் அக்னி சட்டி, பால் காவடி, வேல் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு படையல் பிரித்தல், புஷ்ப அர்ச்சனைகள், மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும், திருமணமாகதவர்களுக்கும், பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு ஏராளமான வளையல்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் பக்தி பணிக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story