அம்மன் கோவில் திருவிழா
போச்சம்பள்ளி ஊராட்சியில் அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
மத்தூர்
போச்சம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களின் சார்பில் பொன்னியம்மன், செல்லியம்மன், பட்டாளம்மன், மாரியம்மன் ஆகிய கோவில்கள் திருவிழா கடந்த 8-ந்தேதி தேதி தொடங்கியது. தொடர்ந்து அம்மன்களுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஊர் மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு எடுத்தல் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான செல்லியம்மன் கரகங்கள் தலைக்கூடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்கள் ஆடுகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஊர் கவுண்டர்கள் கழுத்தின் மீது ஏர் கலப்பையை வைத்து உழும் நிகழ்ச்சி இடம்பெற்றது.