முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்

முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:30 AM IST (Updated: 12 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாகை முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நாகப்பட்டினம்

நாகை முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

வைகாசி திருவிழா

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் கிளி, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் தேரில் எழுந்தருளினார்.

இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரானது பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து மாலை செடில் உற்சவம் நடைபெற்றது.

Next Story