பொங்கல் பூச்சாட்டு திருவிழா,


பொங்கல் பூச்சாட்டு திருவிழா,
x

பொங்கல் பூச்சாட்டு திருவிழா,

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர் பெரியாண்டிபாளையம் பகுதியில் 250 ஆண்டுகாலம் புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோயிலின் பொங்கல் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் சித்திரை மாத திருவிழா 2 வாரம் நடைபெறும். பிரம்மாண்ட திருவிழாவில், ஆண்டிபாளையம் சின்னண்டிபாளையம், சின்ன கவுண்டன் புதூர், குள்ளே கவுண்டன் புதூர், குளத்துப்புதூர், கோழிப்பண்ணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 10,000 - மேற்பட்ட மக்கள் கொண்டாடும் பெரும் விழாவாக நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவானது கடந்த மாதம் 27ஆம் தேதி மாரியம்மன்க்கு சிறப்பு அலங்காரம் செய்து மக்கள் ஒன்றிணைந்து விழாவை தொடங்கினர். (3 ம் தேதி) அம்மன் கோயில் வளாகத்தில் கம்பம் நடத்தல் நிகழ்ச்சியும், (5 தேதி) பிள்ளையார் பொங்கல் வைத்து கொண்டாடும் நிகழ்ச்சியும், (7 தேதி) இன்று அனைத்து ஊர் மக்கள் ஒன்றிணைந்து மாவிளக்கம் எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. (8ம் தேதி) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு அபிஷேக விழாவும் நடைபெற உள்ளது. மேலும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள், கும்மி பாட்டு, ஆகியவை நடைபெறுகிறது. பொங்கல் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கு ஊர் மக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று அம்மனை தரிசித்து ஆசிபெருமாறு ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் கேட்டுக் கொண்டனர்.


Related Tags :
Next Story