ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி
கொள்ளிடம் அருகே வடரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.
கொள்ளிடம்;
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வடரங்கம் கிராமத்தில் பாலவடரங்கநாதர் கோவில்உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு ரங்கநாதர் மற்றும் அரங்கநாயகியை கொள்ளிடம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருவது வழக்கம். ஆனால் இந்த வருடம் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கின்றது. இதனால் இந்த வருடம் தீர்த்தவாரி கோவிலிலேயே நடைபெற்றது. கோவில் அர்ச்சகர்கள் கரைபுரண்டு ஓடும் கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தையும் பொருட்படுத்தாது ஆற்றில் இறங்கி தண்ணீர் எடுத்து வந்து அதை இறைவன் முன்பு வைத்து ெரங்கநாதர் மற்றும் அரங்கநாயகிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். மேலும் இங்குள்ள கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் மற்றும் ஆஞ்சநேயருக்கும் புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் சங்குகளில் வைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய சங்குகள் தானியங்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு அந்த நீரை கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.