பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா
பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
திண்டுக்கல்
பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதி லிங்கேஸ்வரர் கோவிலில், ஐப்பதி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா இன்று நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அரிசி சாதம், காய்கறி, பழங்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அய்யப்பன் கோவில் சன்னதி வளாகத்தில் உள்ள அண்ணாமலையார் கோவில், அய்யம்பாளையம் சிவன் கோவில், சோளீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
Related Tags :
Next Story