பூச்சொரிதல் விழா


பூச்சொரிதல் விழா
x

தர்ம சாஸ்தா அய்யப்ப சாமிக்கு பூச்சொரிதல் விழா நடந்தது

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை;

அம்மாப்பேட்டை சின்ன கடைத்தெருவில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் தனி சன்னிதியில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்ப சாமிக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் நூற்றுக்கணக்கான தட்டுகளில் பல்வேறு மலர்களை சுமந்தபடி அம்மாப்பேட்டை கே.ஆர். கே.தெருவிலிருந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். அங்கு தர்மசாஸ்தா அய்யப்ப சுவாமிக்கு பூச் சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story