தியாகராஜர் கோவில் தெப்பத் திருவிழா நிறைவு


தியாகராஜர் கோவில் தெப்பத் திருவிழா நிறைவு
x

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத் திருவிழா நிறைவு பெற்றது.

திருவாரூர்

திருவாரூர், மே.28-திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா கடந்த 27-ந் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று, தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் பார்வதி- கல்யாணசுந்தரர் எழுந்தருளினர். இரவு 8.30 மணிக்கு குளத்தின் கீழ் கரை பகுதியில் தெப்பம் புறப்பட்டு தென்கரை, மேல்கரை, வடகரை வழியாக 3 முறை வலம் வந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த சாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் நின்று தரிசனம் செய்தனர். இதில் பூண்டி கே. கலைவாணன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டர். நேற்று விடுமுறை என்பதால் தெப்பத்திருவிழாவை காண பொதுமக்கள் கூட்டம் திருவாரூர் நகரில் அலைமோதியது.-

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத் திருவிழா நிறைவு பெற்றது.


Next Story