நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டியில் புரவி எடுப்பு திருவிழா


நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டியில் புரவி எடுப்பு திருவிழா
x
தினத்தந்தி 4 Jun 2023 2:30 AM IST (Updated: 4 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டியில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல்

நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஊர்மந்தைக்கு கொண்டு வரப்பட்டு, புரவிகள் கண் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் பூஜை நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று வாணவேடிக்கையுடன் அய்யனார், கன்னிமார், குதிரை, காளை, மதிலை உள்ளிட்ட புரவிகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, இருப்பிடம் சேர்ந்தது. இதில், ஆவிச்சிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆவிச்சிபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story