கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x

சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணா காலனியில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வெற்றி விநாயகர், சுப்பிரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, தீபாராதனை, முதல் காலயாக பூஜை, முருகனுக்கு சிறப்பு அலங்காரம், 2-ம் கால யாகசாலை பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story