ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலுக்குசொந்தமான ரூ.1 கோடி நிலம் மீட்பு


ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலுக்குசொந்தமான ரூ.1 கோடி நிலம் மீட்பு
x
தினத்தந்தி 19 May 2023 12:45 AM IST (Updated: 19 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய கோவிலான இந்த கோவிலின் நிர்வாகத்திற்கு உட்பட்டது ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவில் ஆகும்.

இந்த கோவிலுக்கு சொந்தமான 37 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும்படி நாகப்பட்டினம் இணை ஆணையர் நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்தப்படும் பணி நேற்று காலை தொடங்கியது.

அதிகாரிகளிடம் வாக்குவாதம்

அப்போது நிலத்தை ஆக்கிரமித்து இருந்த கருப்பையன் நிலத்துக்குரிய ஆவணங்கள் தன்னிடம் உள்ளது என்றும், கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறியதுடன் அந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதற்கான தகவல் பலகை வைக்கக்கூடாது எனவும் அதிகாரிகளிடம் வாதிட்டார்.

ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என கூறி கருப்பையனின் வாதத்தை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர். அப்போது கருப்பையன் மற்றும் அவரது உறவினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவும்படி வலங்கைமான் போலீசாரிடம் கேட்டுக்ெகாண்டனர்.

ரூ.1 கோடி மதிப்பு

இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ேகாவில் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்ற தகவல் பலகையும் அங்கு வைக்கப்பட்டது.

இந்த பணியின்போது குருபகவான் கோவில் கண்காணிப்பாளர் அரவிந்தன், கோவில் நிர்வாக அதிகாரிகள் மாதவன், மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story