விழுப்புரம் அருகேகோவில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகேகோவில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனா்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 56) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். கடந்த 12-ந் தேதி இரவு கோவிலில் பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக கணேசன் வந்தார். அப்போது கோவில் மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது முருகர், வள்ளி தெய்வானை சாமிகளின் வெண்கல சிலையின் கழுத்துப்பகுதியில் இருந்த 10 கிராம் எடையுள்ள தங்க நகைகள் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும்.

இதுகுறித்து கணேசன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story