கோவில் கொடை விழா
கழுகுமலை அருகே கோவில் கொடை விழா நடைபெற்றது.
கழுகுமலை:
கழுகுமலை அருகே கரடிகுளம் சி.ஆர்.காலனி கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் திரளான பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பறவை காவடி ஊர்வலத்தை பஞ்சாயத்து தலைவர் ஜெயசுந்தரிதங்கவேல் தொடங்கி வைத்தார். பறவை காவடி ஊர்வலம் கோயிலை வந்தடைந்த உடன் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை 8 மணிக்கு அம்மன் சப்பரத்தில் வீதியுலா வருதல், மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட வீரசூர பெருமாள் சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. மாலை சிறப்பு பூஜை, தீபாராதனை, சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைதொடர்ந்து சாமபூஜை, சுவாமி வேட்டைக்கு செல்லுதல். சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.